Friday, July 4, 2008

இதுவும் கவிதை தான்

கண்ணீரின் காயம்
நான் அழுகையில்
வானமும் என்னோடு
சேர்ந்து அழுகிறது.
என் துயரின் சின்னமான கண்ணீர், விண்ணீரோடு கரைய,
துக்கம் மட்டும் இன்னமும் என் நெஞ்சில்!

வெட்கம்
தண்ணீர் சிவந்தது
வேட்க்கதால்
குளிக்கையில் உன் ஞாபகம்


தீ
விவசாயி
வயிற்றில்
பசித்தீ - ஒளிர்கிறது இந்தியா

Wednesday, June 4, 2008

வாழ்க தமிழ்

டாடி!!!
ஒன் மினிட் பேபி.
டாடி ப்ளீஸ்...
வெயிட் டார்லிங்...
எனவே... அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்காய் போராடும் நம் மொழிக்கு பிராண வாயு கொடுக்கும் விதமாய், பிற மொழி கலப்பின்றி தமிழ் மொழியை வளர்ப்போம் என்று கூறி வாய்பளித்தமைக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.
பட்டிமன்றத்திற்கான உரையை அவசரமாய் எழுதி விட்டு, காத்திருக்கும் மகளை அள்ளி எடுத்துக் கொஞ்ச சென்றான் தமிழ் அமுதன்.

கைவண்ணங்கள்



Mother Mary.


















வெண்ணை Krishna



















Sola Wood flower pot..


















Sai glass painting















Pot painitng and golden clay rose.
















Taj Mahal carved out of chalk.












Nib paint air of a bouquet.


















Sola wood peacock.




















Keyboard hanger done using card board and mseal.














Some of my glass paintings

உள்ளக்கிடக்கையின் சிந்தனைச்சிதறல்கள்

பாலைவனத் தென்றல்

பாலைவனப் பயணத்தில் வீசும்

ஒரு நொடித் தென்றலாய்

உன் வார்த்தையின் வீரியம்

என்னை

அடுத்த நாளுக்கான அடியை

எடுத்து வைக்கத்தூண்டுகிறது.

காதல் கோழை

இதயத்துடிப்பும் இமைத்துடிப்பும்

என்னை மீறி படபடக்க...

சொல்ல எழுந்த வார்த்தைகள்

பெட்டிப்பாம்பாய் நெஞ்சுக்குள்

சொல்ல விளைந்த என் உணர்வுகளைப்

புரிந்த நீயோ ஊமையாய்...

தெரியவில்லை எனக்கு,

காதலில் யார் கோழைகள்???


காதல்
மூட மறுத்தன என் கண்கள்;
உன்னைக் காணாமல்.
பேச மறுத்தன என் இதழ்கள்;
உன்னோடு பேசாமல்.
கேட்க மறுத்தன என் செவிகள்;
உன் சொல் கேளாமல்.
இதயம் மட்டும் துடித்தது;
உன் பெயரைச் சொல்லி...

காதல்
அற்பமானதோ என்றேண்ணுகையில்
அற்புதமானதே என்றுனர்த்தியது

உன் பிறிவு

என் தலையணைக் கூறியது
ஏய் பெண்ணே!
நான் நீராடவில்லை என
யார் உனக்குக் கூறியது?
நான் ரோஷமற்றவள் என
யார் உனக்குக் கூறியது?
இனியும் என்னை உப்பு நீரால் நீராட்டாதே!