Wednesday, June 4, 2008

உள்ளக்கிடக்கையின் சிந்தனைச்சிதறல்கள்

பாலைவனத் தென்றல்

பாலைவனப் பயணத்தில் வீசும்

ஒரு நொடித் தென்றலாய்

உன் வார்த்தையின் வீரியம்

என்னை

அடுத்த நாளுக்கான அடியை

எடுத்து வைக்கத்தூண்டுகிறது.

காதல் கோழை

இதயத்துடிப்பும் இமைத்துடிப்பும்

என்னை மீறி படபடக்க...

சொல்ல எழுந்த வார்த்தைகள்

பெட்டிப்பாம்பாய் நெஞ்சுக்குள்

சொல்ல விளைந்த என் உணர்வுகளைப்

புரிந்த நீயோ ஊமையாய்...

தெரியவில்லை எனக்கு,

காதலில் யார் கோழைகள்???


காதல்
மூட மறுத்தன என் கண்கள்;
உன்னைக் காணாமல்.
பேச மறுத்தன என் இதழ்கள்;
உன்னோடு பேசாமல்.
கேட்க மறுத்தன என் செவிகள்;
உன் சொல் கேளாமல்.
இதயம் மட்டும் துடித்தது;
உன் பெயரைச் சொல்லி...

காதல்
அற்பமானதோ என்றேண்ணுகையில்
அற்புதமானதே என்றுனர்த்தியது

உன் பிறிவு

என் தலையணைக் கூறியது
ஏய் பெண்ணே!
நான் நீராடவில்லை என
யார் உனக்குக் கூறியது?
நான் ரோஷமற்றவள் என
யார் உனக்குக் கூறியது?
இனியும் என்னை உப்பு நீரால் நீராட்டாதே!

1 comment:

Unknown said...

Hey, good job and great start!!
All the best!